ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று! Lions விளையாட்டு கழகம் champion.(படங்கள் இணைப்பு)

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழக ஆளுமைமிக்க வீரர்களான கவிராஜ், தீசன் அவர்களின் ஏற்பாட்டில் உதயம் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஒற்றுமையினை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று(14) Lions விளையாட்டு கழகம் jolly boys விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இவ் இறுதிப்போட்டியில் Lions விளையாட்டு கழகம் jolly boys விளையாட்டு கழகத்தினை தோற்கடித்து champion ஆனது.
இவ் போட்டிக்கு அனைத்து விதத்திலும் பூரண ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தினர் தெரிவித்துக் கொள்வதோடு champion ஆக தெரிவு செய்யப்பட்ட Lions விளையாட்டு கழகத்திற்கும் Runner up ஆன Jolly boys விளையாட்டு கழகத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.