ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாற்குட பவனி நிகழ்வு…..

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் இந்த வருடத்திற்கான மகோற்சவம் கடந்த (27.08.2025) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
மறுநாள் (28.09.2024) காலை 10.00 மணியளவில் திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்று தொடந்தும் நாளாந்த திருவிழாக்கள் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் (06) சனிக்கிழமை 10நாள் திருவிழாவின் பாற்குட பவனி நிகழ்வுகள் பெருந்திரளான பக்த அடியார்களுடன் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
மேலும் இன்று இரவு சப்புரத் திருவிழா இடம்பெறுவதுடன் நாளைய தினம்11ஆம் நாள் நிகழ்வாக காலை 8.00 மணியளவில் சமுத்திரத் தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
12ஆம் நாள் நிகழ்வாக பூங்காவனம், திருப்பொன்னுஞ்சல் உற்சவங்கள் இடம்பெற்று மறுநாள் வைரவர் பூசை உற்சவம் இடம்பெற்று இவ் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ திருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளது.