ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் பத்தாம்நாள் பாற்குட பவனி நிகழ்வு…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருட ஆவணி பெளர்ணமி பிரம்மோற்சவப் பெருவிழா (19.08.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பிக்கப்பட்டு .
இதனைத் தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் 10ஆம் நாள் திருவிழா ஆகிய இன்றைய தினம் (29.08.2023) காலை நிகழ்வாக பாற்குடபவனி நிகழ்வு கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தானத்தை வந்தடைந்து பூசை நிகழ்வுகள் இடம்பெற்றது.
பாற்குடபவனி நிகழ்வில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு தாகசாந்தி என்பனவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.