ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ பெருவிழா நடைபெறாது. அபிசேக பூஜைகள் மாத்திரம் இடம்பெறும். பக்தர்களுக்கு அனுமதியில்லை: நிருவாகம்

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ பெருவிழா நாளை(12) வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாட்டின் நிலவிவரும் கொரோனா தொற்று அபாயம் காரணமாக பிரமோற்சவ பெருவிழா நடைபெறாது என ஆலயத்தின் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.
குறித்த தீர்மானமானது ஆலய நிறுவகத்தினரினால் நேற்று (10) ஆலய மகோற்சவம் தொடர்பாக இடம்பெற்ற நிருவாக சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிருவாக சபைக் கூட்டத்தில் மேலும் வருடாந்த பிரமோற்சவ பெருவிழா காலப்பகுதியில் ஆலயத்தில் விசேட அபிசேக பூஜைகள் மாத்திரம் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் மற்றும் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தற்போது இனம்காணப்பட்டு வருகின்ற கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலைமை தொடர்பிலும் மக்களது பாதுகாப்பு தொடர்பிலும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது பொறுப்புள்ள நிருவாக சபை எனும் அடிப்படையில் இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கிறார்கள்.