அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் அனுசரணையில் 1000 மாணவர்களுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப் பயிற்சி பரீட்சை….

அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் அனுசரணையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப் பயிற்சி பரீட்சை ஒன்று இன்றைய தினம் (05) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் தெரிவு செய்யப்பட்ட பல பாடசாலைகளில் இடம்பெற்றது.
குறித்த பரீட்சை திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற பாடசாலைகளின் அனைத்து தரம் 05 மாணவர்களையும் உள்ளடக்கியதாக அண்ணளவாக ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.
அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் தலைவர் திரு. V. குணாளன் (ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்), ஒன்றியத்தின் செயலாளர் திரு.V.கனகரெத்தினம் மற்றும் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் நேர்த்தியான திட்டமிடல் மற்றும் அனுசரணையில் இவ்வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுத்தவுள்ள மாணவர்கள் கூடுதல் பயிற்சிகளை பெற்று பயனடையும் விதமாக குறித்த பரீட்சை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இது மாத்திரம் இல்லாமல் (2022) கடந்தவருடம் கூட அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தினரால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுத்தவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.