இலங்கை
சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்கள்


துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்துள்ள சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (29) மதியம் துறைமுக நுழைவு இலக்கம் 03 இன் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு சட்டபடி வேலைசெய்யும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



