ஆலையடிவேம்பு

வைத்தியத்துறை இறுதிப்பரீட்சையில் தணிகாசலம் தர்சிகா முதல் தரத்தில் (First class) சித்தி

வி.சுகிர்தகுமார்  

கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஜ சேர்ந்த தணிகாசலம் தர்சிகா இறுதிப்பரீட்சையில் முதல் தரத்தில்   Passed Final MBBS in first classwith distinctions in medicine, surgery, obstetrics and gynecology, andpsychiatry in Faculty of medicine, University of Colombo)        சித்தியடைந்து தேசிய நிலையில் 3ஆம் நிலையினை பெற்று அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஓய்வு பெற்ற அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் மூத்த புதல்வியான இவர் அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பராமரிப்பு நிலையத்தினூடாக கல்வியில் கால்தடம் பதித்து தனது ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் ஆரம்பித்தார். தொடர்ந்து அங்கு கல்வி பயின்ற அவர்  2012ஆம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியில் துறையில் 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 4ஆம் நிலையினையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அன்மையில் வெளியான  வைத்தியத்துறை இறுதிப்பரீட்சை பெறுபேறுகளின்படி  முதல் தரத்தில் சித்தியடைந்து தேசிய நிலையில் 3ஆம் நிலையினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தியடைந்த தணிகாசலம் தர்சிகாவினை குடும்பத்தாரும் கல்விச்சமூகமும் பிரதேச மக்களும் பாராட்டி வருவதுடன் வைத்திய துறையில் வைத்திய நிபுணராக (Consultant) வரவேண்டும் எனும் அவரது கனவு நிறைவேற வேண்டும் என்பதுடன் அவர் உயர்வு பெற்று அக்கரைப்பற்று மண்ணிற்கு சேவை செய்ய வேண்டும் என  வாழ்த்தி வருகின்றனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker