இலங்கை
அலரி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களையும், அவர்களின் சகல உடமைகளையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடைபாதைக்கு தடங்கல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து அவர்களை வெளியேற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத் தளத்தில் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையூறாக ஒலிபெருக்கி மற்றும் வீதித் தடைகளை பயன்படுத்தவும் தடைவிதித்து உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.