இலங்கை
தம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார கடன் உதவி…

தம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் வாடிகையாளர்களுகளில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வானது வங்கி முகாமையாளர் S.S.சதிஷ் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்து சிறப்பித்தார் இன்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பணத்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இவ் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் V.அரசரெட்ணம் மற்றும் சமுத்தி முகாமைத்துவ பணிப்பாளர் P.கமலேஸ்வரன் ,கருத்திட்ட முகாமையாளர் SP.சீலன் மற்றும் வங்கி உத்தியோத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
-ஜே.கே.யதுர்ஷன்-