அரணெலு வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி: திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில்….

ஜே.கே.யதுர்ஷன்
அரணெலு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் வாழ்வாதார உதவிகள் இன்று (11) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன், உதவி பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன், கணக்காளர் திரு.அரசரெத்தினம், சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் திரு. பரமானந்தம், சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.சசீந்திரன் மற்றும் கருத்திட்ட முகாமையாளர் திரு.கமலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு இவ் வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர்.
இதன்போது 10 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சு, 17 பயனாளிகளுக்கு தையல் இயந்திம், 5 பயனாளிகளுக்கு நீர்ப்பம்பி மற்றும் 2 பயனாளிகளுக்கு குளிர்சாதனப் பெட்டி என்பன வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.