இலங்கை
பெற்றோல் விலை 40 ரூபாவாலும், டீசல் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கின்றதா.?

இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டு மாத காலத்தை ஒரு மாதிரி கடத்தி விட்டு, அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவுடன் எதிர்வரும் வெசாக் தினத்திலிருந்து எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் வெசாக் தினம் நெருங்கும் போது பெற்றோல் விலை 40 ரூபாவாலும், டீசல் விலை 50 ரூபாவாலும், மண்ணெண்ணையின் விலை 80 ரூபாவாலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரித்துச் செல்லும் மரக்கறி விலையைக் கட்டுப்படுத்திக் கொள்ள தற்போதைய அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.