அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ அரிசி பொதிகள்

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் வாழும் 70வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்களுக்காக அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ அரிசி பைக்கற்றுக்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் கே.லவநாதனின் அனுமதியோடு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்படும் அன்புக்கரங்கள் அமைப்பு சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக சுவிஸ் நாட்டை சேர்ந்த அமரர் ச.சுப்ரமணியம் ஞாபகார்த்தமாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ 55 அரிசிப் பொதிகள் கண்ணகிகிராமத்தின் தெரிவு செய்யப்பட்ட வயோதிப மக்களுக்கு வழங்கி வைத்தனர்
குறித்த வயோதிபர்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் அவர்களது உணவுத்தேவையினை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு சமூக அமைப்புக்களும் நலன் விரும்பிகளும் இணைந்து குறித்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கும் பணியை கொடையாளர்களின் உதவியுடன் மனிதாபிமான முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தோடு அன்புக்கரங்கள் அமைப்பின் உறுப்பினர் ரூபி இளங்கோவினால் தயாரிக்கப்பட்ட வயோதிபர்களுக்கு முகக்கவசங்களையும் அணிவித்ததுடன் அவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
நிகழ்வில் கண்ணகிகிராமத்தின் கண்ணகிகிராமத்தின் 1,2 பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்களான பி.கிருஷாந்த் மற்றும், இ.ஜெயந்திரராஜ் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்களான கண்ணன் பிரபு உள்ளிட்டவர்களும் இணைந்து கொண்டனர்.