இலங்கை

கும்பாபிஷேக சர்ச்சையை தீர்த்துவைத்த ஆலயமணி மடத்தடியில் சம்பவம் அதிசயம் ஆனால் உண்மை..

கும்பாபிசேகத்திற்காக கூட்டிய கூட்டத்தில் எழுந்த ஒரு சர்ச்சையை அங்குள்ள ஆலயமணி தானாக திடீரென ஒலித்து தீர்த்துவைத்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இச்சம்பவம் வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூ10ர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
எந்தவொரு தூண்டியுமில்லாமல் தானாக ஆலயமணி ஒலித்தமை தொடர்பில் கூட்டத்தில் கூடியிருந்;த அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியடைந்தார்கள்.ஆச்சரியப்பட்டார்கள். அதிசயம் ஆனால் உண்மையான சம்பவம்.

அங்கு புதியஆலயத்தில் புதியஅம்மன்சிலையை வைப்பதா? பழையஆலய அம்மன்சிலையை வைப்பதா? என்ற சர்ச்சை எழுந்தது.ஒருமணிநேரம் கூட்டத்திலிருந்தோரது கருத்துக்கள் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு என்ன முடிவு எடுப்பதென்று தெரியாமல் தலைவர் ஜெயசிறில் ஒரு முடிவை சொல்லிக்கொண்டிருக்கும்போது அருகிலிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த மணி தானாக கணீரென உச்சக்கட்ட ஒலியுடன் அடித்தது. அங்கு பறவையோ மனிதனோ யாரும் மணியை அடிக்கவில்லை. அந்தஇடத்தில் ஒருகுருவியும் இருக்கவில்லை. இதனை கூட்டத்திலிருந்தோர் அனைவரும் உறுதிப்படுத்தினர்.மெய்சிலிர்த்து மெய்மறந்தனர்.

அதனையடுத்து; மணிஅடிக்கும்போது சொல்லிய முடிவையே ‘அம்மனின்வாக்கு’ என அனைவரும் ஏகோபித்தமுறையில் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்கள்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூ10ர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலயவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதியஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் தொடர்பான பொதுக்கூட்டம் கடந்த (19.12.2021) பழையஆலயத்தில் ஆலயபரிபாலனசபைத்தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்ளிலுமிருந்து அம்பிகை அடியார்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.கூட்டத்தில் முன்னதாக ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைவர் கி.ஜெயசிறில் ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உபதலைவர் எஸ்.கமலேஸ்வரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான குழுக்கள் தெரிவுசெய்யப்படுமுன்னர் பழையஆலயத்திலுள்ள கருவறை அம்மன் விக்கிரகத்தை என்ன செய்வது? புதிய ஆலயத்திற்கென புதிய அம்மன் சிலை தருவிக்கப்பட்டுள்ளது.பழையஆலயத்தை என்னசெய்வது? புதியஆலய கருவறையில் எந்த விக்கிரகத்தை பிரதிஸ்டை செய்வது? என்ற விடயத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

கூட்டஅங்கத்தவர்களது கருத்துகள் பெறப்பட்டன. சிலர் பழையகோயில் அப்படியே இருக்கவேண்டும் எனவும் சிலர் பழைய கோயிலிலுள்ள அம்பாள் விக்கிகமே புதியஆலயகருவறையில் வைக்கப்படவேண்டும் எனவும் இன்னும் சிலர் புதிய ஆலயத்தில் புதிய அம்பாள் விக்கிரகமே பிரதிஸ்டை செய்யப்படவேண்டும் எனவும் கருத்துரைத்தனர்.இது ஆகமவிதிக்குட்பட்டதால் பிரதமகுரு முடிவைச்சொல்லட்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

பலரது கருத்துக்களையும் உள்வாங்கியவாறு தலைவர் ஜெயசிறில் புதிய ஆலயத்தில் பழையஆலய அம்பாள்சிலையை வைப்பதென்றும் புதியசிலையை வசந்தமண்டபத்தில் வைப்பதென்றும் சொல்லிக்கொண்டிருந்தவேளை ஆலயமணி திடிரென தானாக ஓங்கி ஒலித்தது.
மறுகணம் அனைவரும் அம்பாளின் விருப்பமே அது. அவர் இவ்வாறு ஆலயமணி சமிக்ஞையில் தனது ஒப்புதலை விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். எனவே அதன்படி செய்வோம் என அனைவரும் ஏனமனதாக கூறினர்.அந்தவகையில் அந்த சர்ச்சை இலகுவாக ஆலயமணியால் தீர்த்துவைக்கப்பட்டது.

புதிய ஆலயத்திற்கான ஆவர்த்தன மகா கும்பாபிஷேகப்பெருவிழா நடைபெறவிருக்கும் தினம் தொடர்பாக ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் இருதினங்களை அறிவித்தார். சபையோரது கருத்துக்களை உள்வாங்கியபின்னர் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் ஆறாம் திகதி நடைபெற சித்திமாயிருக்கிறதென அறிவித்தார். அதனையும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
பின்பு மகா கும்பாபிஷேகத்திற்கான பிரதான விழாக்குழு மற்றும் பல உபகுழுக்கள் தெரிவுசெய்யப்பட்டன.

( வி.ரி.சகாதேவராஜா)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker