இலங்கை
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !!

இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், பொதுமக்களும் பயன்பெறுவார்கள் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.