ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக கே.பி.ரவிச்சந்திரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் அவர்கள் இன்று (19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தின் விருந்தினர்களாக திருக்கோவில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், ஆகிய நிருவாக சேவை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கடமையை ஏற்றுக்கொண்ட புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பான கே.பி.ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அவரது உறவினர் நண்பர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நன்றி: வி.சுகிர்தகுமார்