ஆலையடிவேம்பு
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு தில்லையாற்று பகுதியில் பனம் விதைகள் நடுகை…..

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முகமாக 5000 பனம் விதைகளை நடும் திட்டத்தில் முதல் கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனங்காடு தில்லையாற்று பகுதியில் இன்று (16) காலை 1200 பனம் விதைகள் நடப்பட்டது.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன், திட்ட இணைப்பாளர் திருமதி அனிதா செல்வகுமார், களப்பணியாளர் திருமதி நிஷாகரி பிரதீபன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் யு. எல் மஷ்மூதா, திருமதி எஸ். ஜனனி, அபிவிருத்தி உத்தியோகர் திருமதி பிருந்தாயினி , பனங்காடு சிறு குழு உறுப்பினர்கள் ஆகியோர் நடுகை நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.