இலங்கை
அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தினரினால் காரைதீவு மற்றும் நற்பிட்டிமுனையில் ஸ்ரீ குருபூஜை விழா இன்று….

அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தினரினால் இன்று (23) காரைதீவு விபுலாந்த மணிமண்டபத்திலும் மற்றும் நற்பிட்டிமுனைபிரதேசத்திலும் ஸ்ரீ குருபூஜை விழா சி.காந்தன் தலைமையில் மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுகள் விருந்தினர்கள் மற்றும் இந்து ஸ்வயம்சேவக சங்க அங்கத்தவர்கள் என்பவர்கள் வருகையுடன் முறையே காலை 09.00 மற்றும் மாலை 05.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
மேலும் குறித்த நிகழ்வுகள் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
























