திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் நிகழ்வு….

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த தை மாதம் (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததுடன், ஆலையடிவேம்பு கல்வி கோட்டம் வலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் இன்றைய தினம் (02) ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய (37) அனைத்து மாணவர்களையும் கௌரவித்து ஊக்குவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.K.தங்கவடிவேல் அவர்களின் தலைமையில் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.R.உதயகுமார், திருக்கோவில் வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் K.கங்காதரன், ஒய்வு நிலை பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.குணாளன், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்,மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 37 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 15 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 36 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்றிருந்தார்கள்.
மேலும் பிரதேச பாடசாலைகளில் சித்தி வீதம் கூடிய பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயம் காணப்படுவதுடன், மேலும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவன் ராஜவரதன் கதுராஜ் (181) தோற்றிய பாடசாலையாகவும் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.