புளியம்பத்தை பிள்ளைகளுக்கான நேசரி பாடசாலை தொடர்பாக மக்களினால் “ஆலையடிவேம்புவெப்” இணையக்குழுவிடம் விடுத்த கோரிக்கைக்கு இன்று தீர்வு!!! நேசரி பாடசாலை திறப்பு விழா…

ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவானது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட சுமார் 45 குடும்பங்களைக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற புளியம்பத்தை கிராமத்திற்கு நேரில் சென்று புளியம்பத்தை கிராம மக்களின் பிரச்சனைகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டோம்.
புளியம்பத்தை கிராம மக்கள் கூறிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக 3 தொடக்கம் 5 வயதை உடைய ஆரம்பப்பாடசாலைக்கு (நேசரி பாடசாலை) செல்லும் பிள்ளைகள் 10 தொடக்கம் 15 பிள்ளைகள் இருக்கின்றார்கள் அவர்களை கல்வி கற்பதற்கு அனுப்புவதற்கு நேசரி பாடசாலை தற்போது இல்லை என அவர்களின் வேதனையை குறியிருந்ததுடன் அதற்கான உதவிகளை செய்துதருமாறு எங்கள் இணையக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
அவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்ட இணையக்குழு உடனடியாக அன்றயதினமே மகாசக்தி அமைப்பினரிடம் நேரில் சென்று பிள்ளைகளுக்கான நேசரி பாடசாலை தொடர்பான பிரச்சினையை அறியப்படுத்தி இருந்தோம் அதுமாத்திரம் இல்லாமல் மகாசக்தி அமைப்பினரிடமிருந்து சாதகமான பதில்களையும் பெற்றுக்கொண்டோம்.
அவர்களின் சாதகமான பதிலைபெற்று காலம் தாழ்த்தாமல் உடனடியாகவே மகாசக்தி அமைப்பினர், புளியம்பத்தைக்கு பொறுப்பான கிராம அலுவலக உத்தியோகத்தர், புளியம்பத்தை கிராம மக்கள்,நேசரி பாடசாலையில் கல்விகற்க இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் என்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எமது இணையக்குழுவின் தலைமையில் மறுநாள் மாலை புளியம்பத்தை கிராமத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று கலந்துரையாடல் ஆனது முக்கிய கலந்துரையாடல் ஆக உருவம்பெற்று புளியம்பத்தை கிராம குழந்தைகளுக்கு ஓர் இரு வாரங்களில் நேசரி பாடசாலை ஆரம்பிக்கப்படும் எனும் சாந்தப்பம் மறுநாளே பெற்றுக்கொடுத்து இருந்தோம்.
அந்தவகையில் இன்றய தினம் திங்கள்கிழமை (09.09.2019) காலை 09.00 மணியளவில் மகாசக்தி அமைப்பினருக்கு சொந்தமான நேசரி பாடசாலை கட்டிடத்தில் மகாசக்தி அமைப்பினரின் தலைவர் திருமதி. மங்கையர்கரசி மற்றும் செயலாளர் திரு.திலகன் அவர்களின் தலைமையில் நேசரி பாடசாலைக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு புளியம்பத்தை கிராம ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் வைத்தியர், பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.மோகனதாஸ் மற்றும் Alayadivembuweb.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் கிரிசாந்,தலைவர் விபுர்தன்,உபதலைவர் அபிராஜ் என்பவர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர் மேலும் நேசரி பாடசாலையின் மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள்,புளியம்பத்தை கிராம மக்கள் என்பவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மகாசக்தி அமைப்பின் தலைவி திருமதி.மங்கையக்கரசி அவர்கள் தலைமை உரையினை ஆற்றும்போது புளியம்பத்தை நேசரியில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்துவோம் அதுமாத்திரம் இல்லாமல் இந்த நேசரிக்காக பல உதவித்திட்டங்களை பெற்றுக்கொடுப்போம் எனவும் நேசரி பாடசாலை ஆரம்பிக்கப்படுவது தொடர்வாக மகிழ்ச்சி அடைவதாகவும் மேலும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரினால் நேசரி பாடசாலை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி காரணமாகவே இன்று இந்த நேசரி பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்றது அவர்களுக்கு நன்றிகள் மேலும் அவர்கள் இதுபோன்று எமது சமுதாயத்திற்காக பல வேலைகளை செய்ய எனது வாழ்த்துக்கள் என கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.
மேலும் மகாசக்தி அமைப்பின் செயலாளர் திரு.திலகன், பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.மோகனதாஸ்,புளியம்பத்தை கிராம ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் வைத்தியர் என்பவர்களும் சிறந்த உரைகளை ஆற்றினார்கள்.
அதனைத்தொடர்ந்து Alayadivembuweb.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் கிரிசாந் அவர்கள் உரையாற்றுகையில் புளியம்பத்தை கிராம மக்கள் சார்பாக இணையக்குழுவாகிய நாங்கள் விடுத்த கோரிக்கையை உடனடியாக கருத்தில் கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இன்று ஆரம்பநிகழ்வை நடத்திக்கொண்டு இருக்கும் மகாசக்தி அமைப்பின் தலைவி திருமதி. மங்கையர்கரசி அம்மா மற்றும் மகாசக்தி அமைப்பின் செயலாளர் திரு.திலகன் அண்ணா அவர்கள் மக்களுக்கான வினைத்திறனாக சிறப்பாக செயற்படும் விதத்தினை வெளிப்படையாக இந்த நேசரி பாடசாலை நிகழ்வு மூலமாக அறிந்து கொள்ளமுடியும் எனவும் மேலும் அவர்கள் வாங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்கு அவர்களுக்கான மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில் புளியம்பத்தை கிராம மக்கள் இந்த நேசரி பாடசாலைக்காக தனிப்பட்ட முறையில் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவி என்பவை பாராட்டத்தக்கது அதேபோன்று புளியம்பத்தை கிராம மக்கள் அனைவரும் நேசரி பாடசாலையினை பேணி பாதுகாக்கவேண்டும் என எங்கள் கோரிக்கையினை முன்வைக்கின்றேன் மேலும் இவ் நேசரி பாடசாலையை திறப்பதற்காக உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என உரையை நிறைவு செய்தார்.
மேலும் இணையக்குழுவினரினால் நேசரில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு பொருற்களும் வழங்கப்பட்டது.