அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈசீ (EC )தொழிற் பயிற்சி நிலையத்தின் அங்குராப்பண நிகழ்வு: நிலையத்தின் பணிப்பாளர் திருமதி. ஆர்.நியோமீ தலைமையில் இன்று…

அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈசீ (EC )தொழிற் பயிற்சி நிலையத்தின் அங்குராப்பண நிகழ்வு இன்று (18.09.2019) அக்கரைப்பற்று மகாசக்தி அமைப்பின் அனுசரணையுடன் ஈசீ (EC) தொழிற் பயிற்சி நிலையத்தில் நிலையத்தின் பணிப்பாளர் திருமதி. ஆர்.நியோமீ அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மகாசக்தி சி.க கூட்டுறவு சங்கத்தின் தலைவி பியசேன மங்கையற்காரசி அவர்கள், கௌரவ அதிதியாக சங்கத்தின் செயலாளர் திரு. ச.திலகராஜன் மற்றும் சங்கத்தின் உறுப்பினார் திரு. நவரெட்ஸ் அவர்களும், சிறப்பு அதிதியாக போதனாஆசிரியர் ஜெ.எம்.பாஸித், மனிதவள அபிருத்தி உத்தியோகத்தர் திரு.சந்திரபவன் , திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் நடனகுமார், விதாதா வள அதிகாரி திரு. இலக்கணகுமார் அவர்களும், மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.