அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டைத்தைச் சேர்ந்த 64 கழகங்கள் பங்குபற்றிய T20 சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாக வெற்றிவாகை….

கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டின் பேரில் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டைத்தைச் சேர்ந்த 64 மென்பந்து கிரிக்கட் கழகங்களை உள்ளடக்கியதாக நடாத்தப்பட்ட T20 சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவாகி அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது.
குறித்த சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டியில் மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 14.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் 19.2 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கட்டுகளை இழந்து 96 ஓட்டங்களைப்பெற்று வெற்றிவாகை சூடியது.
அந்த வகையில் இறுதிப்போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கட்டுகளை கைப்பற்றி துடுப்பாட்டத்தில் 22 ஒட்டங்களை குவித்து தொடர்முழுவதும் தனது சிறந்த தலைமைத்துவம் மூலம் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த தலைவர் சுஜிதன் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானதுடன் அரையிறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக அதிவேகப்பந்துவீச்சாளர் மதுராந்தகன் தெரிவானார்.