
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
அமெரிக்க மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உருவான ‘கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 335 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனாவின் பாதிப்பு குறைவே என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் கருத்து தெரிவிக்கும் போது, “ஒட்டு மொத்த உலகத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது குறைவே” என்றார்.
உலகநாடுகள் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி இந்த கருத்து அமெரிக்கா மக்களிடையே ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
URL Copied