உலகம்
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Douglas County பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
அத்துடன், கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளியே செல்வது ஆபத்தானது என கூறப்பட்டு வரும் நிலையில் குளிர்கால புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அத்துடன், மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.