ஆலையடிவேம்பு
அமரர்.சறோஜா கணேசபிள்ளை 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 14 அன்று….

ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் நடாத்தும் அமரர்.சறோஜா கணேசபிள்ளை அவர்களின் 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டி (29.04.2023) சனிக்கிழமை கோளாவில், தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
குறித்த சுற்றுத் தொடரில் 32 அணிகள் பங்குபற்றுவதுடன் முதலாம் இடத்தைப் பெறும் அணிக்கு 20,000/- ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணம் என்பன வழங்கப்படுவதுடன், இரண்டாம் இடத்தை பெரும் அணிக்கு 15,000/- ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணம் என்பனவும் வழங்கப்பட இருக்கிறது.
போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் இடம்பெற்று வருவதுடன் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.