அமரத்துவமடைந்த அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் ஊர்போடியாரும் சமாதான நீதவானுமாகிய சின்னத்தம்பி சிவஞானமூர்த்தி அவர்களின் நினைவாக நிவாரணப்பணிகள்.

வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக அன்மையில் அமரத்துவமடைந்த அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் ஊர்போடியாரும் அதிபரும் சமாதான நீதவானுமாகிய சின்னத்தம்பி சிவஞானமூர்த்தி அவர்களின் நினைவாக ஒரு இலட்சத்தி இருபதாயிரத்திற்கும்; மேற்பட்ட பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
அமரத்துவமடைந்தரின் மகளும் நோர்வேயில் வசி;ப்பவருமான ரோகினி சிங்கராசா இதற்கான நிதியை அக்கரைப்பற்று பெரிய பிள்ளையார் ஆலயத்திற்கு வழங்கியதுடன் ஆலய நிருவாக சபை ஊடாக கிராம உத்தியோகத்தர்களினால் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு குறித்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒருவருக்கு 2200 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வீடு வீடாக சென்று வழங்கி வைக்கப்பட்டதுடன் பணமாக 200 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஆலய நிருவாகத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.