அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் தென்னைமரம் – கவனத்தில் கொள்வார்களா! கவனத்திற்கு!

அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்றில் இருந்து சின்ன முகத்துவாரத்திற்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் வளவொன்றில் காணப்படுகின்ற தென்னை மரம் ஒன்று அதன் அருகாமையில் அமைந்திருக்கின்ற டெலிகொம் நிறுவனத்தின் தொலைபேசி கம்பத்தின் மீது சாய்ந்திருப்பதுடன் அதனில் உரசுப்பட்டு தென்னம் மரத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருப்பதனை காணக்கூடியதாக இருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் அதிலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தற்போதைய தினங்களில் மாலை நேரங்களில் அதிகளவான காற்று வீசியும் வருகின்ற நிலையில் குறித்த தென்னை மரம் வீதியில் முறிந்து விழக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறித்த வீதியில் பயணம் செய்யும் பயணிகள் அச்சமடைந்து தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதனை கருத்தில்கொண்டு ஆபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்னர் விரைந்து இதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறித்த தென்னை மரம் அமைந்திருக்கும் வளவின் உரிமையாளர், ஆலையடிவேம்பு பிரதேச சபையினர், டெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் பிரதேச மக்கள்.