அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் அவர்களினால் பாடசாலைகளுக்கான கற்றல் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கட்டங்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் பிந்தங்கிய பாடசாலைகளுக்கு அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் அவர்களினால் பாடசாலைகளுக்கான கற்றல் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் முதலாவது நிகழ்வு நேற்று அம்பாறை மாவட்டத்தின் கமு/சது/ சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
முகக்கவசங்கள், கையுறைகள், Infrared thermometer, கிருமி நாசினி தெளிக்கும் கருவிகள், Projector மற்றும் A4 தாள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சது/சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வீ.ரி சகாதேவராஜா, ஆலயபரிபாலன சபை தலைவர், செயலாளர், கிராமசேவகர், பல்கலைக்கழக மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கடந்த கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்பட்ட காலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் உலர் உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.