ஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு – உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் மகாராணி!

இளவரசர் ஹரி மற்றும் மேகன் இனிமேல் அரச தலைப்புகளை பயன்படுத்த மாட்டார்கள் என மகாராணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் அரச கடமைகளுக்காக பொது நிதியைப் பெற மாட்டார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோருக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு இரண்டாம் எலிஸபெத் மகாராணி கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்நிலையில் மகாராணி சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “ஃபிராக்மோர் வீட்டை புதுப்பிப்பதற்கான அரச மானிய செலவுகளை திருப்பிச் செலுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டனர். இது அவர்களின் பிரித்தானிய குடும்ப வீடாகவே இருக்கும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த புதிய அறிக்கையானது 2020 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.