கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கு பெருவிழாவின் விஞ்ஞாபன விபரம்…

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவின் ஆதிக்கோயிலாம் 2000 வருடங்கள் பழமையானதும் ஊர்ப்பிள்ளையார் பெரிய பிள்ளையார் கோயில் என சிறப்பு பெயர் கொண்டு விளங்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மஹா தேவஸ்தானம் எதிர்வரும் 31.03.2021 காலை 10.00 மணி முதல் 01.04.2021 மதியம் 02.00 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
அதனைத்தொடர்ந்து குடமுழுக்கு நிகழ்வு 02.04.2021 வெள்ளிக்கிழமை காலை 06.11 மணிமுதல் 07.41 வரை உள்ள காலத்தில் 17 குண்ட மகா யாக கும்பாபிஷேகம் காண இருக்கிறது.
மேற்படி ஆலயமானது சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் சோழர்காலத்தில் அரசபிரதானிகளால் கருங்கற்திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு பண்ணப்பட்டது 1611 ஆண்டுகளில் போர்த்துக்கேயரால் தரைமட்டமாக இடிக்கப்பட்டது.
கண்டி இராசதானியின் போது மீண்டும் 5 மண்டபங்கள் கொண்ட ஆலயமாக கட்டப்பட்டது.
மேலும் 1640ம் ஆண்டு மாணிக்கப்போடியார் காலத்தில் இவ்வாலயம் 1964ம் ஆண்டு இடிக்கப்பட்டு மீண்டும் புதிய ஆலயம் அமைக்கப்பட்டது.
அந்த வகையில் , போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட பின்னர் இப்போது இடம்பெறும் மகாகும்பாபிஷேகம் 25வது மகாகும்பாபிஷேகம் ஆகும்.
மேலும் இவ்வாலயம் அரசபிரதானிகளால் குருக்கள் மானியம் பெற்ற சிறப்புக்கொண்டது
தற்போது பண்டைய கருங்கற் கோயிலின் தொல்பொருட்கள் கற்தூண்கள் கபோதகம் எழுதகம் அரைப்புக்கற்கள் நிலைக்கற்கள் ஆதிக்கோயிலின் அத்திவாரம் என்பன தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.