இலங்கைஅணியின் ஓய்வறைக்கு சென்ற பாக்கிஸ்தான் அணியினர்- வீடியோ இணைப்பு

இலங்கையை அணியை இரண்டாவது டெஸ்டில் தோற்கடித்த பின்னர் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் இலங்கை அணியின் ஓய்வறைக்கு சென்று பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக நன்றி தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் வெற்றியை கேக்வெட்டி கொண்டாடிய பாக்கிஸ்தான் அணியினர் பின்னர் இலங்கை அணியின் ஓய்வறைக்கு சென்று அவர்களிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பாக்கிஸ்தான் அணியினர் இலங்கை ஓய்வறைக்கு செல்வதையும் இலங்கை வீரர்களை கட்டித்தழுவதையும் சேர்ந்து படமெடுத்துக்கொள்வதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதேவேளை இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் பாக்கிஸ்தானில் தங்களிற்கு கிடைத்த விருந்தோம்பலையும் வழங்கப்பட்ட பாதூகாப்பினையும் பாராட்டியுள்ளனர்.
பாதுகாப்பும் விருந்தோம்பலும்அற்புதமாகயிருந்தது என தெரிவித்துள்ள இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண பாக்கிஸ்தானில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்த பாதுகாப்பு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டிகளை பார்வையிடவந்த இரசிகர்களிற்குநன்றி தெரிவித்துள்ள அவர் பாக்கிஸ்தான் தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்கு பாதுகாப்பான இடம்என குறிப்பிட்டுள்ளார்.
இதேகருத்தினை அஞ்சலோமத்தியுசும் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க மற்றும் இலங்கை அணியின் நிர்வாக உறுப்பினர் டானியல் அலெக்ஸான்டர்ஆகியோரும் பாக்கிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
பல வருடங்களிற்கு பின்னர் பாக்கிஸ்தானில் விளையாடியதன் மூலம் எவ்வளவு பெரும் மகிழ்ச்சியை தாங்கள் ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை இலங்கை வீரர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள் என பாக்கிஸ்தான் அணியின் தலைவர் அசார்அலி இலங்கைஅணி;க்கு பாராட்டுகளைதெரிவித்துள்ளார்.
எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து இலங்கை அணிக்கு மிகப்பெரும் நன்றிகளை தெரிவி;க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் பாக்கிஸ்தான் அணிக்கு மிகவும் கடினமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் நீண்ட நாட்களிற்கு பின்னர் சொந்த மண்ணில் விளையாடுவது மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக காணப்பட்டதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.