அனுஸ்கா சர்மாவிற்கு தேநீர் வழங்குவது மாத்திரமே தெரிவுக்குழுவினரின் கடமையா?முன்னாள் வீரர் சீற்றம்

இந்திய தெரிவுக்குழுவினரை மிக்கிமவுஸ்கள் என சாடியுள்ள முன்னாள் வீரர் பாருக் எஞ்சினியர் இந்திய அணியின் தெரிவுக்குழுவினர் விராட்கோலியின் மனைவிக்கு தேநீர் வழங்கியதை தான் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் தெரிவுக்குழுவினரை கடுமையாக சாடியுள்ள பாருக்எஞ்சினியர் தெரிவுக்குழுவினரை தகுதியற்ற மிக்கி மவுஸ் தெரிவுக்குழுவினர் என வர்ணித்துள்ளார்.
நாங்கள் ஒரு மிக்கி மவுஸ் தெரிவுக்குழுவினரை வைத்திருக்கின்றோம்,விராட்கோலி இதில் பாரிய தாக்கம் செலுத்துகின்றார் அது நல்ல விடயம் ஆனால் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தகுதியானவர்களே இந்த தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பத்து டெஸ்டில் கூட விளையாடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக கிண்ணத்தின்போது தெரிவுக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவரை எனக்கு தெரியாது,அவர் இந்திய அணியின் உடையணிந்திருந்ததால் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டேன் அதற்கு நான் தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளேன் என அவர் தெரிவித்தார் என பாருக் எஞ்சினியர் தெரிவித்துள்ளார்.
அனுஸ்கா சர்மாவிற்கு தேநீர் வழங்குவதை மாத்திரமே உலக கிண்ணத்தின் போது அவர்கள் செய்தனர்.