ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த சகல பொதுமக்களுக்குமான அறிவித்தல்!

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இலங்கையின் சகல பாகங்களிலும் வசிக்கும் இரண்டு இலட்சம் (200,000) சமுர்த்திக் குடும்பங்களை மையமாகக் கொண்ட பூரணத்துவமான வதிவிடம் சார் மனைப் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தலா 20 பயனாளிகள் வீதம் இத்திட்டத்துக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 440 பயனாளிகளதும் விபரங்கள் சகல பொதுமக்களதும் பரிசீலனைக்காகக் கிராம சேவகர் பிரிவுகள் ரீதியாகக் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் தொடர்பான கருத்துக்கள், அபிப்பிராயங்கள் அல்லது முறைப்பாடுகள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் 067 2279325 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்டு எதிர்வரும் 29.03.2021 (திங்கட்கிழமை) ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளரிடம் தெரிவிக்கலாம்.
நியாயமான விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். காலந்தாழ்த்திக் கிடைக்கப்பெறும் எவ்வித முறைப்பாடுகளோ அல்லது கருத்துக்களோ எக்காரணங்கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது என்பதைக் கவனத்திற்கொள்ளுமாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த சகல பொதுமக்களையும் கேட்டுக்கொள்கின்றார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்.