இலங்கை
அதிமேதகு ஜனாதிபதி கெளரவ கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு ஒரு இலட்சம் பணிகள் எனும் வேலைத் திட்டம் பழுக்காம பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது….

அதிமேதகு ஜனாதிபதி கெளரவ கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கமைய பிரதமர் கெளரவ. மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், நிதி அமைச்சர் கெளரவ. பஷில் ராஜபக்ஷவின் திட்டமிடலில் இன்று நாடளாவிய ரீதியில், 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள் எனும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக இன்றைய தினம் (03) வியாழக்கிழமை போரதீவுப்பற்று , வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குறிய ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கௌரவ.பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் பழுக்காம பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.