
கண்ணகிகிராமம் மக்களுக்கு நீர் வழங்குவதற்கு நீர் குழாய் நீண்ட நாட்களுக்கு முன்பே பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கண்ணகி கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு நீர் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பம் செய்து அதற்காக செலுத்த வேண்டிய பணம் செலுத்தி 48 நாட்களாகியும் இதுவரை வீடுகளுக்கான இணைப்பு வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசனம்.
தற்போது நிலவி வருகின்ற வறட்சியான காலநிலையால் மக்கள் நீரின் தேவையினால் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைக்கின்றார்கள்.