Uncategorised
அதிகமானவர்களின் பங்குபற்றலுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினர் ஏற்பாட்டில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்ததான முகாம்….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று இன்று (03) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையுள்ள காலப்பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இவ் இரத்ததான முகாம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஒத்துழைப்புடனும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் இராசரத்தினம் திரவியராஜ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகமான பொதுமக்கள் பங்குபற்றலுடன் திறம்பட நடைபெற்றது.