தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்: குவியும் வாழ்த்துக்கள்…..

தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியின் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருந்தது.
இவ் வெற்றியினை (27.12.2022) இன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து பகிர்ந்து நிகழ்வு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது
இவ் விருதுக்கான பிரதான மதிப்பிடாக அவ் அவ் பிரதேச செயலகத்தில் பொது மக்களுக்காக வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடுவதுடன் இலத்திரனியல் நுட்பங்களை உட்புகுத்தி (e-productivity) விரைவான சேவையை வழங்குகின்ற ஆற்றல் என்பவையும் இந் மதிப்பீட்டில் பிரதானமாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு இந் விருதுக்காக அரச நிறுவனங்களை தெரிவு செய்கின்றனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இதுவரையில் பெறப்பட்ட அதிகூடிய அடைவுமட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் கடந்த (15.12.2022) அன்று இடம்பெற்றிருந்தது. திருக்கோவில் பிரதேச செயலகம் உற்பத்தி திறன் போட்டியில் 3ஆம் இடத்தினைப் பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருந்த பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றார்கள்.