இலங்கை
திருக்கோவில் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு

ஜே.கே.யதுர்ஷன்
வெசாக் தினமாகிய இன்று திருக்கோவில் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வானது இன்று (15) மாலை திருக்கோவில் பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டதுடன் மேலும் திருக்கோவில் பொலிஸ் நிலையமானது மின்குமிழ்கள் மற்றும் வெசாக் கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட வகையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.