
அசுவெசும கொடுப்பனவை பெற்றுத்தருவதாக கூறி நூதன திருட்டில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அவ்வாறு யாராவது உங்களை தொடர்பு கொண்டால் பிரதேச செயலக அசுவேசு நலன்புரி பிரிவுடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
இவ்வாறானதொரு சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கோளாவில் 3 பிரதேசத்தில் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக அறிய கிடைத்துள்ளது.
குறித்த பிரிவில் வாழும் அசுவெசும கொடுப்பனவு இதுவரை கிடைக்கப்பெறாத குடும்பம் ஒன்றிற்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட பெண் ஓருவர் உங்களது அசுவெசும கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காக அவரது கணக்கிலக்கத்தை வழங்குமாறு கேட்டுள்ளார்.
அத்தோடு இரகசிய இலக்கம் வருகின்ற தொலைபேசி இலக்கத்தையும் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
பின்னராக ஆண் ஒருவர் தொடர்பு கொண்டு குறித்த கணக்கில் ஒரு தொகைப்பணத்தை வரவிலிடுமாறும் மேலதிக அசுவெசும பணம் அக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (28) பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த அசுவெசு கிடைக்கப்பெறாத பெண் உரிய உத்தியோகத்தரிடம் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கிய நிலையில் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவ்வாறு யாராவது அழைத்தால் உடன் பிரதேச செயலக அசுவெசும பிரிவு உத்தியோகத்தரை நாடுமாறும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றார்.