அக்கரைப்பற்று “POWER” விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…..

அக்கரைப்பற்று “POWER” விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயம், திகோ/ அன்னை சாரதா கலவன் பாடசாலை, திகோ/ திருநாவுக்கரசு வித்தியாலயம் மற்றும் திகோ/ தம்பட்டை வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த அண்ணளவாக 150 மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு பிரதேசத்திலுள்ள முன்னணி வளவாளர்களை கொண்டு அக்கரைப்பற்று, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் மிகச்சிறப்பாக இன்று (02) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி பி.ப 1.30 மணிவரை இடம்பெற்றது.
இதன் போது மாணவர்களுக்கான அழகிய கோவை ஒன்றும், பென் ஒன்றும் இடைவேளையின் போது சுவையான சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரீட்சையின் போது வினாக்களுக்கு எவ்வாறு விடையளிக்கப்பட வேண்டும் என்பதற்கான நுட்பங்கள், பரீட்சை நேரங்களின் போது எவ்வாறு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு இறுதியில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடன் இக் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.