ஆலையடிவேம்பு
Trending
அக்கரைப்பற்று 241ஆம் காலாற்படை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் தூய்மைப்படுத்தல் நிகழ்வு…..

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசம் வாச்சிக்குடா கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதி அதனை அண்டிய பகுதிக்கான தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்றைய தினம் (25) காலை இடம்பெற்றிருந்தது.
அக்கரைப்பற்று 241ஆம் காலாற்படை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம், பிரதேசசபை மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார பணிமணை ஆகியவை இணைந்து இவ் தூய்மைப்படுத்தும் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று 241ஆம் காலாற்படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச, பிரதித்தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் இவ் தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.