அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது…..

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் – 15 (15.09.2024) அன்று நடாத்தப்படுவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் ஆலய நிர்வாகத்தினர் மேற்பார்வையில் மிகவும் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்காக ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதற்காக ஆலயம் பாலஸ்தாபனம் செய்யும் நிகழ்வு கடந்த (02/02/2024) அன்று இடம்பெற்று இருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆலய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதுடன் தற்போது கும்பாபிஷேகத்திற்காக செப்டம்பர் – 15 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டு பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புனரமைப்பு பணிகள் பிரதேச மக்களின் நிதி பங்களிப்புடன் நடைபெற்று வருவதுடன் குறித்த புனரமைப்பு பணிகளை விரைந்து முடிப்பதற்கு பிரதேச மக்களின் நிதி மற்றும் பொருள் பங்களிப்புக்கள் ஆலய நிர்வாகத்தினரால் எதிர்பார்க்கப்படுகிறது.




