ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா நாளை (15) அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம்…..

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனின் வருடாந்த அலங்கார சக்திப் பெருவிழாவானது நிகழாண்டு சோகங்கள் நீக்கிடும் சோபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 28ஆம் நாள் (15.10.2023) ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும், சித்திரை நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.30 மணியளவில் அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் உற்சவ விழா இடம்பெற இருக்கிறது.
மேலும் ஆலயத்தின் தீமிதித்தல் நிகழ்வு (24.10.2023) காலை 05.30 மணிக்கு இடம்பெற இருப்பதுடன் (31.10.2023) அன்று இடம்பெறும் எட்டாம் சடங்குடன் உற்சவ நிகழ்வுகள் இனிதே நிறைவடையவும் இருக்கின்றது.