ஆலையடிவேம்பு, கவடாப்பிட்டி கதிரேசன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கவடாப்பிட்டி கதிரேசன் அறநெறி பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன், ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் பணிப்பாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் M.கிரிசாந் தலைமையில் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கவடாப்பிட்டி கதிரேசன் அறநெறி பாடசாலையில் அவ் மாணவர்களின் கற்றலுக்குத்தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளடங்கிய பொதி வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் அதிதியாக ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.சி.கனகரெத்தினம் மற்றும் ஆலையடிவேம்பு கதிரேசன் அறநெறி பாடசாலையின் இணைப்பாளர் திரு புண்ணியமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டார்கள் மேலும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் உப தலைவர் அபிராஜ், உறுப்பினர்கள் கபிஷன் , யனோசன் மற்றும் கவடாப்பிட்டி ஊர் பிரமுகர்கள் அவர்களும் கலந்து கொண்டனர்.