அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலய சூர சம்ஹாரம் நிகழ்வு இன்று….

-கபிஷன்-
முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாள் அன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர் புரிந்து இறுதியில் சேவலும் மயிலுமாக மாறிய வரலாற்றினை கொண்ட கந்தசஷ்டி விரத்தின் மகிமையினை அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (09.11.2021 ) அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் மாலை வேளையில் சூரன் சம்ஹாரம் (சூரன் போர்) நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது முருகனுடன் சூரன் போர் புரிவதற்காக எவ்வாறான அவதாரங்களை எடுத்தார் என்ற கதையினை எடுத்தியம்பக்கூடியதாக இன்று ஆலய வெளி வீதியில் வெகுசிறப்பாக சூரன்போர் நடைபெற்றது.
இதன் போது பெரும் திரளான பக்கத்தர்கள் கலந்து கொண்டதுடன் குறித்த நிகழ்வு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஒழுங்கு செய்யப்பட்டுயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.