ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (15) ஆரம்பம்…..

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரப்பெருவிழா நிகழும் சோபகிருது வருடம் புரட்டாதித்திங்கள் 28ம் நாள் (15-10-2023) ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை சுபமுகூர்த்த சுபவேளையில் கங்கையரட்டுதல் நிகழ்வுடன் ஆலயத்தில் கணபதி ஹோமமும் இடம்பெற்று மாலை அம்மனின் திருக்கதவு திறத்தலுடனும் பெருவிழா ஆரம்பமாக இருக்கிறது.
மேலும் ஆலயத்தின் தீமிதித்தல் நிகழ்வு (25.10.2023) காலை இடம்பெற இருப்பதுடன் மற்றும் ஆயுத பூசையுடனும் இப் பெருவிழா இனிதே நிறைவடையவும் இருக்கின்றது.