ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று, திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (04) புதன்கிழமை அதிபர் திரு.JR.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் பங்கு பற்றிய சிறு ஊர்வலம் ஒன்றும் காலை வேளையில் ஏற்பாடு செய்து நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மாணவர்களை மகிழ்வடையச் செய்யும் விதமாக மாணவர்களுக்கிடையில் பல விளையாட்டு போட்டிகள் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.