இலங்கை

நாளையும் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்!

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளையும் (03) இலங்கையில் 7 மணிநேர 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 5 மணிநேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், இரண்டரை மணி நேரமும் மின்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker