ஆலையடிவேம்பு பிரதேச கனகாம்பிகை பாலர்பாடசாலை மீள ஆரம்பிக்கப்படுவதனை முன்னிட்டு பாடசாலை வளாக சுற்றுசூழலில் சிரமதான பணி….

கொரோனா (கொவிட் -19) வைரஸ் தொற்று நோய் தாக்கத்தினால் நாட்டின் பல பாலர் பாடசாலைகள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனாவின் தாக்கத்தினை அரசாங்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இருக்கின்ற இந்த காலப்பகுதியில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில்.
நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்த எமது பிரதேச கனகாம்பிகை பாலர்பாடசாலை திறக்கப்பட இருப்பதனால் குறித்த பாலர் பாடசாலை வளாக சுற்றுசூழலில் சிரமதான பணிகள் இன்றைய தினம் (14) காலை 8.30 மணியளவில் கனகாம்பிகை பாலர்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு உறுப்பினர்கள் என்பவர்கள் பங்களிப்புடன் முழுமையான முறையில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் பாலர் பாடசாலை ஆரம்பிப்பதற்கான முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.