அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா)பாடசாலையின் 2020 ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் விடுகை விழா…

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா) பாடசாலையின் 2020 ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் விடுகை விழா மற்றும் பாராட்டும் நிகழ்வு (25/09/2020) இன்று பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
இன் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு. அ.சுமன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இன் நிகழ்வில் கமு/திகோ / ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி.க.சோமபால அம்மணி அவர்களும் கமு/திகோ /ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் திரு.பி.தணிகாசலம் அவர்களும் கெளரவ அதிதியாக கலந்துகொண்டனர்.
மேலும் நட்சத்திர அதிதியாக செல்வி தர்சிகா தணிகாசலம் அவர்களும் இன் நிகழ்வில் நட்சத்திர அதிதியாக கலந்துகொண்டார்.
நட்சத்திர அதிதியாக கலந்து கொண்ட செல்வி தர்சிகா அவர்களுக்கு பாடசாலையின் அதிபரினால் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஏன பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது மாணவர் தலைவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.