அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு ஜனாதிபதியால் பாராட்டு….

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் 2023,2024 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் மாவட்ட மட்டத்தில் முதல் 10 நிலைக்குள் வந்த (District Rank) நான்கு மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து தலா ஒரு இலட்சம் நிதியும் சான்றிதழும் வழங்கப்பட்டு ஜனாதிபதியால் பாராட்டப்பட்டுள்ளனர்.
அம்மாணவர்களாக
1. P.துஸ்மிதன் – உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (மாவட்ட நிலை-7)
2. S.அக்சயன் – பொறியியல் தொழில் நுட்பப் பிரிவு (மாவட்ட நிலை-9)
3. J.தேனுஜா – உயிர் முறைமை தொழில் நுட்பப் பிரிவு (மாவட்ட நிலை-8)
4. N.தளிர்சாய் – வர்த்தகப் பிரிவு (மாவட்ட நிலை-3)
மேற்படி நான்கு மாணவர்கள் இன்றைய தினம் (05) காலை ஒன்று கூடலின்போது மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் பாராட்டப்பட்டு வாழ்த்தப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்கள்,பகுதி தலைவர்கள்,கற்பித்த ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்து மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.